அனைத்து இந்திய அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மாவட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டம் 15-10-23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2.30 வரையும் மற்றும் மாலை 6 மனி முதல் இரவு 07.15 வரை நடை பெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் Rtn RSK ரகுராம் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் குழந்தைவேல் அவர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர் திரு போடி N ரவிபிள்ளை அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உயர்மட்ட குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் Dr V பழனியப்பன் அவர்கள், திரு MSS காந்தவாசன் அவர்கள், திரு சற்குண பாண்டியன் அவர்கள் மற்றும் இளைஞர் அணி தலைவர் திரு KKB அருண் அவர்கள் கலந்து கொண்டனர்.
மாநில மகளிர் அணி செயலாளர் தமிழ் செம்மல் பேராசிரியர் வேலம்மாள் முத்தையா அவர்கள், மாநில பொருளாளர் திருமதி நீலா D பிள்ளை அவர்கள், B2C பொறுப்பாளர் திருமதி பூங்கொடி கேசவ மூர்த்தி அவர்கள், வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் திருமதி கற்பக சரவண பிரியா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.