அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் முப்பெரும் விழா தூத்துக்குடி மாவட்டம் D A திருமண மண்டபத்தில் 28-10-2023 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக திருமதி J காமாட்சி அவர்கள் மற்றும் திருமதி பானு பாலா அவர்கள் இறைவணக்கம் பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம், துறைமுகத்தில் பணி நிறைவு பெற்ற திரு M முருகேசன் அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா மற்றும் வரன் அறிமுக விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.