திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் SV புரம் மற்றும் வாளவாடியில் நமது அமைப்பின் சார்பாக சமீபத்தில் 29-11-23 ஆம் நாள் துவக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பவர் தையல் இயந்திர தொழிற்கூடத்தின் செயல்பாட்டினை அமைப்பின் சார்பாக 04-12-23 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 9 மணி முதல் 10.15 மணி முடிய SV புரத்திலும் மற்றும் 11 மணி முதல் 12 மணி முடிய வாளவாடியிலும் அமைப்பின் பொறுப்பாளர்களும் மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர்களும் பங்கேற்று பார்வையிட்ட போது.
எஸ் வி புரத்தில் தையல் கூடமாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் வாளவாடியில் பை தைக்கும் தொழிற்கூடமாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைப்பின் மூலமாக வழங்கப்பட்ட எலக்ட்ரிக் பவர் தையல் இயந்திரம் சிறப்பாக இயங்குவதாகவும், தையலகத்தில் பாவாடை மற்றும் நைட்டி போன்றவை தையல் செய்து விற்பனை செய்ய விற்பதாகவும் தெரிவித்தார்கள்.