மதுரை மாவட்ட அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் மற்றும் சொக்கலிங்க நகர் சேனைத்தலைவர் இளைஞர் பேரவை ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த சர்க்கரை பரிசோதனை முகாம் இன்று மதுரை காளவாசல், சொக்கலிங்க நகர் பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. தேவையானவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.