அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன், தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள வலம்புரி அம்மன் கோவிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட தலைவர் செந்தில் அவர்கள் மாவட்ட செயலாளர் திரு முத்து மகேஷ் குமார் அவர்கள் மாவட்ட பொருளாளர் செந்தில் வடிவேலு அவர்கள், துணைத் தலைவர் திரு பணகுடி சங்கர் அவர்கள், துணைத் தலைவர் திருக்குறுங்குடி திரு மாரியப்பன் அவர்கள் , இணைச் செயலாளர் திரு எஸ்வி சுவாமிநாதன் அவர்கள், திருமதி சுப்புலட்சுமி அவர்கள் திருமதி கோமதி அவர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர் திரு ஹரிப் பிள்ளை அவர்கள் ஆகியோர் வெள்ள நிவாரணம் வழங்கும் பகுதிகளை தேர்வு செய்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.