Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் : தேனி மாவட்டம்

தேனி மாவட்ட அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 09-02-2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தேனி மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி டெல்லி ராணி அவர்கள் இறைவணக்கம் பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய இருதய நிபுணர் டாக்டர் V சொக்கலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சமுதாயத்தின் ஒற்றுமையின் அவசியத்தையும் உடல்நலம் காக்க முக்கியமான காரணிகளையும் எடுத்துக் கூறினார் உணர்வு, உணவு, உடற்பயிற்சி, மூன்று "உ" உடலுக்கும் இருதயத்திற்கும் அவசியம் என்பதை எடுத்துக் கூறினார்.
Matrimony