
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் பொதுகுழுக்கூட்டம் திண்டுக்கல் PSNA காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆடிட்டோரியத்தில், 10-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நமது சங்கத்தின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள் தலைமையிலும், சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு Rtn RSK ரகுராம் அவர்கள், முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
நம் சமுதாயம் பயனடையும் வகையில் AIMPA வருங்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி சங்கத்தின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள் விவரித்து தலைமைவுரையாற்றினார். சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டி பொதுச்செயலாளர் திரு Rtn RSK ரகுராம் அவர்கள் முன்னிலைவுரையாற்றினார்.
சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் மத்திய மண்டலத்தலைவர் திரு. மருத்துவர் R. குழந்தைவேல் அவர்கள், சங்கத்தின் இளைஞர் அணித்தலைவர் திரு. B.அருண்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மகளிர் அணி பொறுப்பாளர்கள், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், அவரவர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினார்கள். மேலும் மண்டல தலைவர்கள் செயலாளர்கள். பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இப் பொதுகுழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் மகளிர் அணி தலைவராக திறம்பட செயல்பட்டு வந்த முனைவர் திருமதி P. வேலம்மாள் அவர்களை சங்கத்தின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்கள். திருமதி Dr. C.D திலகவதி அவர்கள் சங்கத்தின் மகளிர் அணி தலைவியாக நியமிக்கப்பட்டார்கள். முன்னரே சுற்றறிக்கையில் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்திற்கு கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, திருவள்ளூர் போன்ற 18 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள். புதிதாக ஆரம்பிக்க பட்ட 4 மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, சேலம், கரூர் என்று மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்து 200 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.