Completed Event

மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு, பெண்களுக்கு சுயதொழில் துவக்க உதவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக விழா

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தேனி மாவட்டம் மதுராபுரி 17-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வேலப்பா ஹோட்டலில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு. P.ராமச்சந்திரன் ஐயா அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை அறிமுக செய்து விழா பேருரையாற்றினார், பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள் பெண்களுக்கு சுயதொழில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரையாற்றினார். பொருளாளர் திரு M. ரலி முதலியார் அவர்கள் மாவட்ட அளவிலான 12 ஆம் வகுப்பு 10 வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி பேருரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக திரு PDC சூரிய வேலு அவர்களும் கலந்து கொண்டு சமுதாய பெண்கள் வளர்ச்சிக்காக நலிவுற்ற பெண்களுக்கு மாவு அறைக்கும் இயந்திரம், மற்றும் தையல் இயந்திரம் வழங்கியும் மாவட்ட அளவிலான 12 ஆம் வகுப்பு 10 வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் அமைப்பு செயலாளர் திருமதி. P. வேலம்மாள் அவர்கள்,. மந்திய ஒருங்கிணைப்பாளர் செ.கண்ணன் அவர்கள், தேனி மாவட்ட தலைவர் திரு. A.S. ராஜ் குமார் தலைமையிலும், தேனி மாவட்ட செயலாளர் P. கலையரசன், வரவேற்புரையும் வழங்கினார்கள். பாண்டிய மண்டல செயலாளர்கள் திரு. Er. P. பாலசுப்ரமணியன் அவர்கள், திரு. உ. ல் அவர்கள், திருமதி டெல்லி ராணி ஆகியோர் சிறப்புரையாற்றிளார்கள். திரு. Ln. P. வெங்கடேஷ் மற்றும் மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் விழா சிறப்பாக நடந்தது. அனைத்து வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Matrimony