Completed Event

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 118-வது பிறந்தநாள் விழா

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக, 64-வது நாயன்மாராகப் போற்றப் பெறும் சிறப்புக்கு உரியவரான சைவ ஆன்மீக ஆசிரியர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதரித்த 118வது திருநாளான ஆவணி வளர்பிறை சுவாதி நட்சித்திரம் செப்டம்பர் 8 ஆம் தேதி அவர் பிறந்த ஊரான காங்கேயநல்லூரில் நமது சங்கத்தின் பொருளாளர் திரு M. ரவி முதலியார் ஐயா அவர்கள், சங்கத்தின் அமைப்பு செயலாளர் முனைவர் திருமதி. பா. வேலம்மாள் அவர்கள், தொண்டை மண்டலத் தலைவர் திரு.பாலு முதலியார் அவர்கள், மகளிர் அணித் தலைவி முனைவர். திருமதி. C.D. திலகவதி அவர்கள், கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரிசு திருபுகழனார், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையிலும் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இவ்விழாவில் திரு. திருநாவுக்கரசு முதலியார், மற்றும் வேலூர் மாவட்டத்தை சார்ந்த பொறுப்பாளர்கள் திரு. ராம்குமார், திரு.சிவகுமார், திரு.முருகேசன், திரு.செந்தில், திரு.விஸ்வநாதன், திரு.இரகுபதி ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். இந்த கொண்டாட்டத்தில் 300 நபர்களுக்கு உணவும் 200 நபர்களுக்கு வேட்டி சேலையும் வழங்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில் உள்ள நம் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமுதாய பெருமக்கள் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு. தியாகச் செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆன்மீக மற்றும் பங்களிப்புகளையும் அவரின் தியாகத்தையும் புகழையும் மற்றும் அவரது அளப்பரிய வாழ்க்கையையும் சாதனைகளையும் நினைத்து வணங்கி போற்றினார்கள்.

Matrimony