அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக, நமது மாண்புமிகு கப்பலோட்டிய தமிழன் சுதேசி உணர்வை வித்திட்ட செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் செப்டம்பர் 5 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கொண்டாட்டத்தில் மலர் அஞ்சலிகள், அவரது சுதேசியத்தை எடுத்துக்காட்டும் உரைகள் மற்றும் நமது தேசம் மற்றும் சமூகத்தில் அவர் நீடித்த தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. அவருடைய வாழ்க்கையிலிருந்து தொடர்ந்து உத்வேகம் பெற்று நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.
தலைமையின் வழிகாட்டுதலின்படி அமைப்புச் செயலாளர், மத்திய ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர்கள் மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக செயல்படுத்தினார்கள். மேலும், திருநெல்வேலி, சென்னை, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், வேலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, கோவை போன்ற அனைத்து மாவட்டத்திலும் உள்ள நம் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமுதாய பெருமக்கள் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு. தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரம். அய்யாவின் பாரம்பரியம் மற்றும் பங்களிப்புகளையும் அவரின் தியாகத்தையும் புகழையும் மற்றும் அவரது அளப்பரிய வாழ்க்கையையும் சாதனைகளையும் நினைத்து வணங்கி போற்றினார்கள்.