Completed Event

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பார்வைக் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் டிராக்கர்கள் வழங்கும் விழா

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சென்னை பெருநகர மாவட்டத்தில் 22-09-2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நங்கநல்லூர் , PRS Sports Academy-யில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பார்வைக் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் டிராக்கர்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள் நல்ஆசியுடன், நமது சங்கத்தின் பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேருரையாற்றினார். பொருளாளர் திரு M. ரவி முதலியார் அவர்கள் மாவட்ட அளவிலான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக திரு. A. ஜோதி முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்க பெரும் பங்காற்றிய திரு. A. சிவசங்கர் அவர்களை சென்னை பெருநகர மாவட்டம் சார்பாக மனதார வாழ்த்தி பாராட்டுகிறோம்.

இந்நிகழ்வில் சங்கத்தின் அமைப்பு செயலாளர் முனைவர். பா. வேலம்மாள் அவர்கள் முன்னிலையிலும், மகளிர் அணித் தலைவர் திருமதி. C.D. திலகவதி அவர்கள், தொண்டை மண்டல தலைவர் திரு. M. பாலு முதலியார் அவர்கள், வட மண்டல தலைவர் திரு. Dr. M. செந்தில்குமார் அவர்கள், மகளிர் இணை செயலாளர் மகளிர் மேலாண்மை திருமதி. Ln. S. அபிசங்கரி அவர்கள், திரு. D. உமா சிவம், மாநில B2C ஒருங்கிணைப்பாளர், தென்மண்டல செயலாளர் திரு. மகேஷ் முத்துக்குமார் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சென்னை பெருநகர மாவட்ட தலைவர் திரு. Dr. Ln. K. பழனியப்பன் அவர்கள், தலைமையிலும், சென்னை பெருநகர மாவட்ட செயலாளர் திரு. G.D.S. மணி அவர்கள், வரவேற்புரையும் வழங்கினார்கள்.

AIMPA கல்வி & வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் திரு. K. நித்தியக்குமார் அவர்கள் சார்பாக 20 பார்வைக் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக இருக்கும் மொபைல் டிராக்கர்களை உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள் வழங்கினார்.

AIMPA கல்வி & வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் திரு. K. நித்தியக்குமார் அவர்கள் மற்றும் சென்னை பெருநகர மாவட்ட நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் விழா சிறப்பாக நடந்தது. மகளிர் அணி பொருளாளர் திருமதி. பூங்கொடி, அவர்கள் சிறந்த நெறியாளுகை செய்தார் திரு. K.S. ராம்குமார், வேலூர் மாவட்ட தலைவர், திரு. V. சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர், போன்ற அனைத்து வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் சென்னை பெருநகர மாவட்ட நிர்வாகிகள் உட்பட இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பெண்கள், சமுதாய பெரியோர்கள், மாணவ மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர். வட மண்டல செயலாளர் திரு. M.R. ரமேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Matrimony