Completed Event

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் சார்பாக மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா


ராமநாதபுரம் டவுனில் 16-9-23 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் ராமநாதபுரம் அவின்கோ AWINCO ஹோட்டலில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மற்றும் கல்வி கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு MS வாசன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் திரு ஓம் சக்தி R ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அமைப்பின் நோக்கம் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக இயற்கை விவசாயி கனடா நாட்டின் மிகப்பெரிய  பொறுப்பில் இருப்பவரும் கோத்தகிரியில் மிகப்பெரிய அளவில் இயற்கை விவசாயம் செய்து வருபவருமான திரு கணேசன் அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் இயற்கை விவசாயத்தை சமுதாய மக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மாநில அமைப்பு செயலாளர் திரு போடி N ரவிபிள்ளை அவர்கள், மகளிர் அணி தலைவர் முனைவர் திருமதி P வேலம்மாள் முத்தையா அவர்கள், மகளிர் அணிச் செயலாளர் திருமதி உமாவாசன் அவர்கள், மண்டல செயலாளர் திரு பொன் அனந்தபத்மகுமார் அவர்கள், திரு K வெங்கடாசலம் அவர்கள் மற்றும் Er P பாலசுப்பிரமணி அவர்கள், விருதுநகர் மாவட்ட தலைவர் திரு MG ராமர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி அம்சவல்லி அவர்கள்
ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது மாவட்டங்களில் செயல்பாடுகள் பற்றியும் பெண்கள் சுய தொழில் முன்னேற்றம் குறித்தும் மருத்துவ உதவி மற்றும் சட்ட உதவிகள் செய்து வருவது பற்றியும் எடுத்துரைத்தனர்.

உறுப்பினர் அடையாள அட்டையை அமைப்புச் செயலாளர் திரு போடி N ரவிபிள்ளை அவர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 

வ.உ.சி பேரவை மாவட்ட  தலைவர் திரு சூரிய பிரகா‌ஷ் அவர்கள், திரு ஈஸ்வர் மருத்துவமனை சேர்மன் Dr.திருமலைவேலு அவர்கள், தொழிலதிபர். திரு செல்வம் அவர்கள்,  உத்திரகோசமங்கை இளங்கோ மெடிக்கல் திரு இளங்கோ அவர்கள், கழுகூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி அவர்கள்,மருந்தாளர் திரு ஜெய்சங்கர் அவர்கள், BDO திரு சரவணன் அவர்கள், பொதுப்பணிதுறை திருமதி லோகாம்பாள் அவர்கள் தேவிபட்டினம் கிளை பொறுப்பாளர்கள்,பழங்குளம் மற்றும் காட்டூரணி பொறுப்பாளர்கள்,வசந்த நகர் பொறுப்பாளர்கள், மற்றும் பலர் திரளாக பங்கேற்றனர்.

அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு Dr.K.பாஸ்கரன் அவர்கள், துணைத்தலைவர்கள்  சர்வேயர் திரு கணேசன் அவர்கள், திரு மதிவானன் அவர்கள், இணை செயலாளர்கள் திரு ஆடவல்லான் அவர்கள், கீழக்கரை திருஞானம் அவர்கள், திரு சுதாகரன் அவர்கள், மவட்ட மகளிர் அணி தலைவர்  திருமதி விமலா ராஜேந்திரன் அவர்கள், துணைத்தலைவர் வட்டார கல்வி அலுவலர் திருமதி ஜெயா அவர்கள், திருமதி செல்வராணி ஆசிரியர் அவர்கள், பொருளாளர் திருமதி உமா மகேஸ்வரி அவர்கள், இணைச்செயலாளர்கள் நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி தமிழரசி, திருமதி பரமேஸ்வரி அவர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Matrimony